Latestமலேசியா

உலகளாவிய விமான முறைமை கோளாறு: மலேசிய விமான நிலையங்களில் check-in & boarding பாதிப்பு – MAHB

கோலாலம்பூர், டிசம்பர் 23 – உலகளவில் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் பயணிகள் செயலாக்க முறைமையில் தற்காலிக கோளாறு ஏற்பட்டதால், மலேசிய விமான நிலையங்களில் ‘check-in’ மற்றும் boarding செயல்முறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய விமான நிலைய நிறுவனமான MAHB தெரிவித்துள்ளது.

MAHB வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த கோளாறு காரணமாக சில விமான நிறுவனங்கள் அவசர நடைமுறைகளை அமல்படுத்தியுள்ன என்று கூறப்பட்டுள்ளது.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும்தான் MAHB முதலில் முன்னுரிமை வழங்கும் என்று கூறியுள்ளது.

அதே நேரத்தில், விமான நிலையங்களில் உள்ள சுயசேவை கியோஸ்க்கள் முழுமையாக செயல்படுகின்றன என்றும், இதன் மூலம் பயணிகள் போர்டிங் பாஸ் மற்றும் பைகள் அடையாள அட்டைகளை (baggage tags) அச்சிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள், விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும், தங்களின் விமான அட்டவணை குறித்த சமீபத்திய தகவல்களை நேரடியாக விமான நிறுவனங்களிடம் உறுதிப்படுத்தவும், மேலும் ஆன்லைன் செக்-இன் வசதிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!