கோலாலம்பூர், அக்டோபர் 8 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் 15ஆவது இடத்தில் உள்ளார்.
2025ஆம் ஆண்டிற்கான ஜோர்டானின் ராயல் இஸ்லாமிய வீயுக ஆய்வு மையத்தின், உலகின் 500 மிகவும் செல்வாக்குமிக்க முஸ்லிம்கள் பதிப்பகத்தில், இத்தகவல் வெளியிடப்பட்டது.
அன்வார் இரண்டு முறை இடம்பெற்றுள்ள நிலையில், ‘ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்’ எனும் பிரிவில் 9வது இடமும், ‘சிறந்த 50 மற்றும் கெளரவமான குறிப்புகள்’ பட்டியலிலும் பட்டியலிடப்பட்டுள்ளார்.
1997 நிதி நெருக்கடியின் போது அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உடனான அவரது மோதல் மற்றும் அவரின் சிறைவாசம் உட்பட வெற்றிகள், பின்னடைவுகள் ஆகிய இரண்டையும் குறிப்பிடும் அவரின் அரசியல் வாழ்க்கையையும் இந்த வெளியீடு சிறப்பித்துக் காட்டுகிறது.