![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/1200-675-23201774-486-23201774-1735273947108-780x470.jpg)
கோலாலம்பூர், டிச 27 – இந்தியாவின் நவீன பொருளாதார சிற்பியும் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தனது நேசத்துக்குரிய நண்பருமான டாக்டர் மன்மோகன் சிங் மறைந்தது குறித்து தாம் கவலை அடைந்திருப்பதோடு அவர் என்றும் தனது இதயத்தில் நீக்கமற நிறைந்த அற்புதமான மாமனிதர் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டினார்.
பொருளாதா சீர்த்திருத்தங்கங்களை செய்த அந்த தலைவரைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் , கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் நிச்சயமாக நிறைய இருக்கும்.
பிரதமராக பதவி வகித்த காலத்தில் உலகின் முக்கிய பொருளாதார சக்தியாக இந்தியா உருமாற்றம் காண்பதற்கு அவர் அளப்பரிய பங்கை ஆற்றியிருப்பதை மறுக்க முடியாது என அன்வார் வர்ணித்தார்.
1990 ஆம் ஆண்டுகளில் நாங்கள் இருவரும் நிதியமைச்சர்களாகப் பணியாற்றிய போது, பொருளாதார சீரமைப்பு கொள்கைகளின் தொடக்க ஆண்டுகளை நேரில் பார்க்கும் அரிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
ஊழலுக்கு எதிரான போரில் நாங்கள் தீவிரமான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டோம் . ஒரு பெரிய வழக்கின் முடிச்சை அவிழ்ப்பதில் கூட நாங்கள் ஒத்துழைத்தோம். அப்படிப்பட்ட நண்பராக விளங்கி டாக்டர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது என அன்வார் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை டாக்டர் மன்மோகன் சிங் வித்தியாசமான மனிதராக திகழ்ந்தார். மறுக்கமுடியாத நேர்மையானராகவும் , உறுதியான பிடிப்பு உள்ள அரசியல்வாதியாகவும் அவர் விளங்கினார்.
அடுத்துவரும் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் பாராம்பரியத்தை விட்டுச் செல்லக்கூடிய மனிதராக அவர் விளங்கினார். தன்னைப் பொறுத்தவரை, அவர் எல்லாவற்றிலும் இன்னும் அதிகமாக இருப்பார். பலருக்கு இது தெரியாது, நான் மலேசியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது.
தாம் சிறையில் இருந்த ஆண்டுகளில், செய்ய முடியாத கருணையை அவர் செய்ய முன்வந்தார். இது அரசியல் ரீதியாக கற்பனை செய்ய முடியாதது என்றாலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனது பிள்ளைகளுக்கு குறிப்பாக எனது மகன் இஹ்சானுக்கு ( Ihsan ) கல்வி உபகாரச் சம்பளம் வழங்க மன்மோகன் சிங் முன்வந்தார். அவரது அந்த கருணை வாய்ப்பை நான் நிராகரித்திருந்தாலும் , அவரது மனிதாபிமானத்தையும் பெருந்தன்மையையும் அச்சம்பவம் எனக்கு உணர்த்தியது.
நான் சிறைவாசம் அனுபவித்த அந்த இருண்ட நாட்களில் எனக்கு ஒரு உண்மையான நண்பராக அவர் இருந்தார். அமைதியான பெருந்தன்மையின் இத்தகைய செயல்களால் தனது இதயத்தில் டாக்டர் மன்மோகன் சிங் என்றும் நிலைத்திருப்பார் என தனது முகநூலில் அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.