
லாஸ் ஏஞ்சல்ஸ் , ஜூன் 11 – அதிபர் டோனல்ட் டிரம்ப்பின்
உத்தரவின் பேரில் செவ்வாயன்று 700 மெரின் ( Marine) படையினர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு வந்தனர். இந்த நடவடிக்கை அரசியல் ரீதியான நோக்கத்தை கொண்டுள்ளதாக கூறி கலிபோர்னியா கவர்னர்
கேவின் நியுசோம் ( Gavin Newsom ) ஆட்சேபனை தெரிவித்த போதிலும், நகரத்தில் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக டோனல்ட் டிரம்ப் ஏற்கனவே 4,000 00 அதிரடிப்படை போலீசாரையும் அனுப்பியுள்ளார்.
வெள்ளிக்கிழமை டிரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியான குடிநுழைவு சோதனைகளைத் தொடங்கியதிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் ஆர்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெரும்பாலும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு டிரம்பின் பதில் மிகைப்படுத்தப்பட்ட எதிர்வினை என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 700 மெரின் படையினர் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பப்படுவதற்காக காத்திருக்கும் ஒரு மேடைப் பகுதியில் இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மெரின் படையினருக்கு கைது அதிகாரம் இல்லை, மேலும் கூட்டரசு சொத்துக்கள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாப்பார்கள் என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாயன்று கிரேட்டர் லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 2,100 அதிரடைப் படை வீரர்கள் இருந்ததோடு மேலும் பலர் வரவுள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.