
ஜார்ஜ் டவுன் – ஆகஸ்ட் 8 – கடந்த 2020 ஆம் ஆண்டு, பண்டார் பாரு ஏர் இடாமில் தன்னுடைய பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்ட கல்லூரி மாணவிக்கு உயர் நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
மேலும் அப்பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படாமல் மறுவாழ்வு அணுகுமுறையை நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும், அதன் பின்னர் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டுள்ளார் என்றும் பொதுநல அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அம்மாணவிக்கு பின்னர் சிசுக்கொலை என்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அபராதம் செலுத்தப்படாவிட்டால் 5 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருக்கும் பட்சத்தில் அப்பெண்ணின் குடும்பம் அபராதத்தைச் செலுத்தியுள்ளனர்.