கர்நாடக, ஆகஸ்ட் 8 – திருமணமான முதல் நாளே மணமகன், மணமகள் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொண்டதில், இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நவீன் குமார் என்பவருக்கும் லிகிதா ஸ்ரீ என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.
இதையடுத்து, மதியம் புதுமணத்தம்பதிகள் தனியாக ஓர் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது இருவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி அருகிலிருந்த கத்தியை எடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாகக் குத்திக் கொண்டதாக தெரிகிறது.
இந்த கத்திக்குத்து சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மணமகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேவேளையில், மணமகன் மட்டும் ரத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.