
ஜெர்மனி, ஆகஸ்ட் 27 – ஜெர்மனி விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் *Anopheles* வகை கொசுக்களால் மலேரியா பரவியதில், விமான நிலைய ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
மேலும் ஐந்து பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அரிதானது என தெரிவித்த ராபர்ட் கோச் (Robert Koch) நிறுவனம், இதுபோன்ற நோய்த்தொற்றுகள் சில நேரங்களில் தாமதமாகக் கண்டறியப்படுவதால், நோயாளிகளுக்கு தீவிரமான அறிகுறிகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியது.
இதையடுத்து, விமான நிலையத்தில் கொசுப் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்படும் கொசுக்கள் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் (Antwerp, Belgium) வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் மரபணு மூலம் தோற்றத்தை கண்டறியும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
மலேரியா கொசுக் கடியால் பரவும் நோயாகும். காய்ச்சல், தலைவலி, குமட்டல் மற்றும் கடுமையான நடுக்கம் ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகளாகும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டால், நோயாளிகள் முழுமையாக குணமடைய வாய்ப்புள்ளது.



