Latestமலேசியா

கல்லூரி மாணவி தவனேஸ்வரி அவராக விழவில்லை; விழவைக்கப்பட்டார்; தற்கொலை அல்ல கொலை; போலீஸ் விசாரிக்க பெற்றோர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை-12 – செந்தூல் தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி மாடியிலிருந்து அவராக விழுந்து உயிரிழக்கவில்லை; தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அது தற்கொலை அல்ல; திட்டமிட்ட ஒரு கொலை.

எனவே அதனை ஒரு கொலையாக வகைப்படுத்தி விசாரிக்க வேண்டுமென அவரின் பெற்றோர் போலீஸை வலியுறுத்தியுள்ளனர்.

தவனேஸ்வரிக்கு நீதி கோரி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்குடும்பத்தின் சார்பில் வழக்கறிஞர் மனோகரான் மலையாளம் அவ்வாறு கூறினார்.

இன்னொரு தியோ பெங் ஹோக் வழக்கு போல் இது ஆகிவிடக் கூடாது என்றார் அவர்.

இவ்வேளையில் மகளின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றென தவனேஸ்வரியின் தந்தை கூறினார்.

அதில் என்னமோ மர்மம் இருக்கிறது என்றார் அவர்.

செய்யாத தவறுக்கெல்லாம் தன்னை பலிகடா ஆக்குவதாகக் கூறி கடைசி வீடியோ அழைப்பில் மகள் அழுததை, கண்ணீர் மல்க அவரின் தாயார் நினைவுக் கூர்ந்தார்.

மகளின் மரணம் குறித்து புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், தவனேஸ்வரியின் பெற்றோர் இரண்டாவது போலீஸ் புகாரை செய்யவிருக்கின்றனர்.

அதே சமயம் கல்லூரியின் கவனக்குறைவு குறித்தும் வழக்குத் தொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

தவனேஸ்வரியின் மரணம் குறித்து விசாரிக்க மரண விசாரணை நடத்தவும் வலியுறுத்தி சட்டத் துறைத் தலைவருக்கு மனோகரன் கடிதம் எழுதவுள்ளார்.

20 வயது மாணவியின் இந்த அகால மரணத்திற்கு நீதி வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இறந்த தவணேஸ்வரியின் குடும்பத்தினர்,வழக்கறிஞர்,மற்றும் அரசசார்பற்ற இயக்கத்தினர் என சுமார் 30 பேர் இன்றைய பத்திரக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!