
கோலாலம்பூர், செப்டம்பர்-25,
கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் ஹிஷாமுடினில் சாலை சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருந்தபோதும் வாகனத்தை நிறுத்தாமல், பெண் பாதசாரி ஒருவரை மோதும் நிலைக்குச் சென்ற 42 வயது e-hailing ஓட்டுநரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
மெர்டேக்கா சதுக்கம் அருகே நிகழ்ந்த அச்சம்பவத்தின் 32 வினாடி வீடியோ முன்னதாக டிக் டோக்கில் வைரலானது.
அப்பெண் பாதசாரி காயமடையவில்லை;
ஆனால் அவர் எடுத்துச் சென்ற பொருட்கள் தரையில் விழுந்ததை அதில் காண முடிந்தது.
புதன்கிழமை காலை கைதுச் செய்யப்பட்ட அவ்வாடவர் மீது 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
சம்பவம் குறித்து கூடுதல் தகவல் இருந்தால் அருகிலுள்ள எந்தவொரு போலீஸ் நிலையத்தையும் தொடர்புகொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுகின்றனர்.