
காஜாங்கில் தனிப்பட்ட நில தகராறு வன்முறையாக மாறியது; 5 பேர் கைது
காஜாங், பிப்ரவரி-13,
சிலாங்கூர் காஜாங்கில் நேற்று காலை ஒரு நிலத்தின் மீதான தனிப்பட்ட தகராறு காரணமாக மூண்ட சண்டை வன்முறையாக மாறியதில், ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
4 சக்கர வாகனமொன்று ஒரு மோட்டார் சைக்கிளோட்டியை வேண்டுமென்றே மோதுவதைக் காட்டும் வீடியோ வைரலானதை அடுத்து போலீஸ் விசாரணையில் இறங்கியது.
அதில் அச்சம்பவம் Kampung Sungai Jernih பகுதியில் நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.
ஆபத்தான முறையில் வாகனமோட்டி கொலைச் செய்ய முயன்றதாக ஒரு புகாரும், கும்பலாகக் கொள்ளையிட்டு கடத்த முயன்றதாக மற்றொரு புகாரும் செய்யப்பட்டதை, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar உறுதிப்படுத்தினார்.
நில தகராறு மற்றும் அப்பகுதியில் லாரி செல்வதற்கான பாதையால் பிரச்னை வெடித்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தனிப்பட்ட தகராறே தவிர குண்டர் கும்பல் சண்டையோ அல்லது இன மோதலோ அல்ல என்பதை Shazeli தெளிவுப்படுத்தினார்.



