
ஈப்போ, செப்டம்பர் 26 – தேசிய வகை செபோர் பள்ளியில் 101 மாணவர்கள் நச்சுணவு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, பள்ளி சிற்றுண்டியில் சாப்பிட்ட வறுத்த கோழி மற்றும் சாக்லேட் பானங்களுக்குப் பிறகு, அவர்களுக்கு உணவு விஷமாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பதாக பேராக், சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஃபைசுல் இத்ஸ்வான் (Dr. Feisul Idzwan) கூறினார்.
பள்ளியில் விற்கப்பட்ட சாக்லேட் சுவை கொண்ட பானம் உட்கொள்ளும் போது ‘புளிப்பு’ வாசனையாகவும், வறுத்த கோழியோ முழுமையாக சமைக்கப்படவில்லை என்பதையும் மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட உணவு நச்சுணவால் ஏற்படும் அறிகுறிகளுக்கு அடுத்து, நேற்று காலை 8 மணியளவில் 5 மாணவர்கள் முதலில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து, 50 பெண் மாணவர்களும், 51 ஆண் மாணவர்களும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.