
கோலாலம்பூர், பிப் 17 – கிள்ளான், காப்பாரில் Bukit Cerakah சாலையில் இன்று காலை மணி 6.40 அளவில் நிகழ்ந்த விபத்தில் போலீஸிற்கு சொந்தமான லாரியில் கார் ஒன்று மோதியதைத் தொடர்ந்து அக்கார் ஓட்டுனர் எலும்பு முறிவுக்கு உள்ளானதோடு மூன்று போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.
அந்த விபத்தைத் தொடர்ந்து Kia Sorento கார் தீப்பிடித்ததால் அக்கார் 90 விழுக்காடு எரிந்ததாக காப்பார் தீயணைப்புத்துறையின் நடவடிக்கை கமான்டர் நுருல் அஸ்மான் முகமடான் ( Nurul Azman Muhammadan ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
காயம் அடைந்த மூன்று போலீஸ்காரர்களும் போலீஸ் லோரியில் இருந்தவர்களாவர். காயத்திற்கு உள்ளான அவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.