Latestமலேசியா

கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டு; நற்பெயரைக் கெடுக்கும் சதி – MACC

புத்ராஜெயா, பிப்ரவரி-25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மீது எழுந்துள்ள ‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டுகளுக்கு அது மீண்டும் கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இக்குற்றச்சாட்டுகள், அதன் புகழைக் கெடுக்க மேற்கொள்ளப்படும் சதி முயற்சியாகும் என MACC கூறியது.

அடிப்படை ஆதாரம் இல்லாத, பெயரில்லா வலைப்பதிவிலிருந்து வந்த குற்றச்சாட்டுகளை Bloomberg ஆராயாமல் செய்தியாக வெளியிட்டுள்ளதாக MACC கூறியது.

இத்தகைய ‘பொய்யான’ குற்றச்சாட்டுகள், பொது மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் எனவும் அவ்வாணையம் எச்சரித்தது.

ஊழல் எதிர்ப்புப் பணியை அச்சமின்றி தொடரவும் MACC உறுதியளித்துள்ளது.

எது எப்படி இருப்பினும் தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதால், அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் MACC கூறிற்று.

இக்குற்றச்சட்டுகள் தொடர்பில் அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டுமென DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார்.

ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங்கும், வெளிப்படையான விசாரணை தேவை எனக் கோரியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!