ஈப்போ, அக்டோபர்-8, கடந்த பிப்ரவரியில் கார் நிறுத்துமிடத்திற்கான போட்டா போட்டியில் இன்னொரு பெண்ணைக் காயப்படுத்தியதாக வழக்கறிஞர் ஒருவர் இன்று ஈப்போ மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
எனினும் 72 வயது Goh Suan Poi தம் மீதான அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார்.
பிப்ரவரி 18-ஆம் தேதி ஈப்போவில் உள்ள பேராங்காடியொன்றின் கார் நிறுத்துமிடத்தில், 35 வயது அஷ்விண்டர் குவார் நாராயண் சிங் (Ashvinder Kuar Naranya Singh) எனும் பெண் வழக்கறிஞருக்கு
வேண்டுமென்றே காயம் விளைவித்தாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஓராண்டு சிறை, இரண்டாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்ட மூதாட்டி 500 ரிங்கிட் மற்றும் ஒருநபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நவம்பர் 11-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.