
ஷா ஆலாம், நவம்பர்-21,
கோலாலாம்பூர் Pintasan Saloma அருகே கிள்ளான் ஆற்றில் ஏற்பட்ட நீர்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவரின் சடலம், 6-ஆவது நாளான இன்று ஷா ஆலாமில் கண்டுபிடிக்கப்பட்டது.
Kampung Sungai Kandis ஆற்றுப் பகுதியில் காலை 10.30 மணிக்கு சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டதை, டாங் வாங்கி போலீஸ் தலைவர் துணை ஆணையர் Sazalee Adam உறுதிப்படுத்தினார்.
தற்போதைக்கு சவப்பரிசோதனைக்காக உடல் ஷா ஆலாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்த மேல் விவரங்கள் பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை கிள்ளான் ஆற்றை தரமுயர்த்தும் பணிகளில் 13 பணியாளர்கள் ஈடுபட்டிருந்த போது, கனமழையால் ஏற்பட்ட திடீர் நீர் பெருகில் அவர்களில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்; மற்ற 12 பேரும் காப்பாற்றப்பட்டனர்.
இதையடுத்து அவரைத் தேடி மீட்பதற்காக 200-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியாளர்கள் களத்தில் இறக்கப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன், அவரின் 4 சக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்ட, நிலையில், இன்று ஒருவழியாக அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



