Latestமலேசியா

குடிநுழைவு அதிகாரிக்கு காயம் விளைவித்தார் சீனப் பிரஜைக்கு ஒரு மாதம் சிறை

செப்பாங், ஆகஸ்ட் 18- KLIA அனைத்துலக விமான நிலையத்தில் முதலாவது முனையத்தில் குடிநுழைவு அதிகாரியை காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்கும்படி அந்த பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் Mandarin மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், 31 வயதான Fang Fuyuan குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் Khairatul Animah Jelani  இந்த தீர்ப்பை தெரிவித்தார்.

Nurdiana Atirah Shapinaz Abdul Rahman அரசு ஊழியராக தனது அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது வேண்டுமென்றே தன்னை காயப்படுத்தியதாக Fang மீது குற்றம் சாட்டப்பட்டது.

KLIA அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் பயணிகள் புறப்படும் முனையத்தில் இந்த குற்றத்தை புரிந்ததாக Fang மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!