கோலாலம்பூர், டிசம்பர்-18, அடுத்தாண்டு முதல் குடியுரிமை விண்ணப்பங்களுக்கான முடிவுகள் ஓராண்டுக்குள் தெரிய வரும்.
குடியுரிமைப் பிரச்னை ஆக்கப்பூர்வமாகக் கையாளப்படுவதை உறுதிச் செய்யும் SOP நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அந்த ஓராண்டு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அது, மக்களின் உரிமை நிலைநாட்டப்படுவதையும் காக்கப்படுவதையும் உறுதிச் செய்யும் மடானி அரசாங்கத்தின் கடப்பாடு என, KDN எனப்படும் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddim Nasution Ismail) தெரிவித்தார்.
2022 டிசம்பர் 21 முதல் இவ்வாண்டு டிசம்பர் 27 வரை 32,408 அல்லது 80 விழுக்காட்டு குடியுரிமை விண்ணப்பங்களை KDN பரிசீலித்து முடித்துள்ளது.
அவற்றில் சில விண்ணப்பங்கள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகக் காத்துக் கிடந்தவை என அமைச்சர் சுட்டிக் காட்டினார்.