Latestமலேசியா

திறமையும் விவேகமும் இருந்தால் மலாய்க்கார தலைவர்கள் பிதரமராகலம் -புவாட் ஷர்காசி

கோலாலம்பூர். டிச 17 – திறமையும் , விவேகமும் இருந்தால் மலாய்க்கார தலைவர்கள் பிரதமராகலாம் என்பதால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதில்லையென அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமது புவாட் சர்காஷி தெரிவித்திருக்கிறார்.

மலேசியா சுதந்திரம் அடைந்த 66 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பிரதமராக இருக்கும் மலாய்க்காரர்களால் தான் நாடு நிர்வகிக்கப்படுகிறது. மலாய்க்கார தலைவர்கள் நேர்மையாகவும், திறமையாகவும் விவேகமாக இருந்தால் மற்ற சமூகத்தினர் மலாய்க்கார தலைவர் பிரதமராகுவதற்கு நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்குவார்கள் என முகமது புவாட் சர்காஷி கூறினார்.

மலாய்க்கார இஸ்லாமியர்கள் மட்டுமே பிரதமாக வருவதற்கு அரசியலமைப்பு சட்டத்தை திருத்தவேண்டும் என பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமால் கூறியிருப்பது விவேகமான ஆலோசனை அல்ல.  வான் அஹ்மத் ஃபய்சல் போன்றவர்கள் திறமையும் , விவேகம் இல்லாத மலாய் தலைவர்களை ஆதரித்தால் மலாய்க்காரர் அல்லாத தலைவர் பிரதமராகுவதற்கு 100 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதில்லையென முகமது புவாட் சர்காஷி சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!