
குவாலா கிராய், ஏப்ரல்-6- கிளந்தான், குவாலா கிராயில் ஒரு வாரமாகக் காணாமல் போயிருந்த ஆடவர், அழுகியச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜாலான் கோத்தா பாரு – குவா மூசாங் அருகே செம்பனைத் தோட்ட கால்வாயில் தனது மோட்டார் சைக்கிளில் அவர் இறந்துகிடந்தார்.
ஏப்ரல் 1-ஆம் தேதி குவாலா கிராயில் நண்பரைப் பார்க்கச் செல்வதாகக் கூறிச் சென்ற 59 அவ்வாடவர் அதன் பிறகு வீடு திரும்பவேயில்லை என, குடும்பத்தார் முன்னதாக போலீஸில் புகார் செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் வாக்கில் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொது மக்களிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக, குவாலா கிராய் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் மஸ்லான் மாமாட் கூறினார்.
தலையில் ஹல்மட் அணிந்திருப்பதை வைத்துப் பார்க்கும் போது, மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு கால்வாயில் விழுந்து அவர் மரணமடைந்திருக்கலாமென நம்பப்படுகிறது. என்றாலும் விரிவான விசாரணை நடைபெறுமென மஸ்லான் கூறினார்.
சடலம் சவப்பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.