குவா மூசாங், டிச 24 – வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கத்துறையான (Perhilitan ) குவா மூசாங் Paloh 1இல் ஒரு சிறுத்தைப் புலியை பிடித்து பாதுகாப்பான வனவிலங்கு பகுதிக்கு மாற்றுவதில் வெற்றி பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்ட பொறியில் அந்த விலங்கு சிக்கியதாக கிளந்தான் Perhilitan இயக்குனர் முகமட் ஹபிட் ரொஹானி ( Mohamad Hafid Rohani) தெரிவித்தார்.
Kuala Krai வட்டார பெர்ஹிலித்தான் துறையின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் குவா மூசாங் வனவிலங்கு பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களும் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அந்த சிறுத்தையை பாதுகாப்பான மற்றும் பொருத்தமான வாழ்விடப் பகுதியில் விட்டனர்.
Paloh 1 , Gua கிராமத்திற்கு அருகேயுள்ள காட்டு வளப் பகுதியிலிருந்து உணவுத் தேடி அந்த சிறுத்தை வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
தங்களது கிராமங்கள் மற்றும் அவர்களது தோட்டத்திற்கு அருகேயுள்ள புதர்களை தூய்மைப்படுத்தும்படி இதற்கு முன் கிராமவாசிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டதாகவும் Mohamad Hafid கூறினார்.
இதனிடையே வனவிலங்குகளை எதிர்நோக்கும் மக்கள் அது குறித்து பெர்ஹிலித்தான் துறைக்கு தொடர்புகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.