ஜெராண்டூட், அக்டோபர்-15, பஹாங், குவாலா தாஹான் அருகேயுள்ள தாமான் நெகாரா பூங்காவில் முகாமிட்டிருந்த போது மரம் மேலே விழுந்து படுகாயமடைந்த பெண் மலையேறி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மீட்புப் பணியில் இடம் பெற்றிருந்த மருத்துவக் குழு, 49 வயது பெண்ணின் மரணத்தை உறுதிப்படுத்தியது.
அவரின் உடல், குவாந்தான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
அக்டோபர் 7-ம் தேதி கூனோங் தாஹான் மலையேறிய Wan Nurulhuda Mior Abdullah, முகாமிடும் பகுதியில் தனது கூடாரத்தில் தூங்கிகொண்டிருந்த போது, அவர் மீது மரம் விழுந்தது.