Latestமலேசியா

கெடாவில் பயங்கரம்; மாமன்-மச்சான் சண்டையில் பாராங் கத்தியால் தலையே துண்டானது

கெடா, ஜெர்லுனில் மாமன் – மச்சான் இடையே நிகழ்ந்த சண்டையில் ஆடவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு 7 மணிக்கு Kampung Pida நெல்வயலில் அந்த பயங்கரம் நிகழ்ந்ததை, குபாங் பாசு மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.

தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த போலீஸ், கொல்லப்பட்டவரின் வீட்டிலிருந்து வெறும் 30 மீட்டர் தொலைவில் உள்ள நெல்வயலில் அவரின் தலையில்லா சடலத்தை மீட்டது.

துண்டிக்கப்பட்ட தலை சடலத்தின் அருகே கிடந்தது; 45 வயது அவ்வாடவரின் உடல்களில் சரமாரியான வெட்டுக் குத்துக் காயங்களும் இருந்தன.

அப்போது இன்னமும் கையில் பாராங் கத்தியுடன் ஆவேசமாக நின்றிருந்த 35 வயது மச்சானை, போலீஸ் ஒருவழியாக சமாதனப்படுத்தி இரவு 8 மணியளவில் கைதுச் செய்தது.

30 சென்டி மீட்டர் நீளமுள்ள பாராங் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

இருவருமே நெல் விவசாயிகள் என்றும், எதற்காக இந்த கொடூரக் கொலை நிகழ்ந்தது என தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!