Latestமலேசியா

கெடாவில் 5 பேரைக் கடித்துக் குதறிய _Rottweiler_நாயின் உரிமையாளருக்கு 8,500 ரிங்கிட் அபராதம்

பாலிங், ஏப்ரல்-16, நோன்புப் பெருநாள் இரண்டாவது நாளன்று 5 பேரைக் கடித்துக் குதறும் அளவுக்கு தனது Rottweiler நாயைக் கட்டுப்படுத்தாமல் கவனக்குறைவாக இருந்ததற்காக, அதன் உரிமையாளருக்கு 8,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வர்த்தகருமான 60 வயது Chong Shen Chong, தம் மீதான 5 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, பாலிங் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 1,700 ரிங்கிட் அபராதம் என்ற வகையில் மொத்தமாக 8,500 ரிங்கிட் விதிக்கப்பட்டது.

அபராதத்தை கட்டத் தவறினால் 2 மாத சிறை விதிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

சம்பவத்தன்று இன்னொரு Rottweiler நாயுடன் சேர்ந்துகொண்டு இந்த நாய் ஐவரைக் கடித்துக் குதறியது.

அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில், 2 நாய்களும் கருணைக் கொலை செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!