சீக், அக்டோபர்-19 – கெடா, சீக், கம்போங் கூலாவில் இதுநாள் வரை கோழிகளையும் வாத்துகளையும் அடித்து தின்று வந்த புலி இன்று காலை சிக்கியது.
அதிகாலை 5 மணியளவில் கிராம மக்கள் ஒருவரது வீட்டிலிருந்து 70 மீட்டர் தொலைவில் உள்ள கோழி கூண்டிலிருந்து ஏதோ பிராண்டும் சத்தம் கேட்டது.
போய் பார்த்தால் அங்கு கூண்டினுள் புலி இருந்தது கண்டு வீட்டுக்காரர் அதிர்ச்சியடைந்தார்.
கூண்டிலிருந்த 15 கோழிகளில் 9 கோழிகள் அப்புலியால் அடித்துக் கொல்லப்பட்டதையும் கண்டார்.
உடனடியாக MERS அவசர அழைப்பு எண்களுக்கு அழைத்ததில், APM எனப்படும் பொது தற்காப்புப் படை வந்து புலியைப் பிடித்துச் சென்றது.
பிடிபட்ட புலி வனவிலங்குத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.
புலி பிடிபட்டாலும், அப்பகுதியில் மேலும் சில புலிகளின் நடமாட்டம் இருக்குமோ என கிராம மக்கள் அச்சத்தில் வாழுகின்றனர்.