Latest

கோத்தா கினாபாலு பள்ளி மாணவி தாக்குதல்: 7 மாணவர்கள் கைது

கோத்தா கினபாலு, மே-29 – சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ ஒன்றில், சபாவில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உதவுவதற்காக 7 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

15 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் உட்பட அனைத்து சந்தேக நபர்களும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கைதுச் செய்யப்பட்டதாக, கோத்தா கினாபாலு போலீஸ் கூறியது.

இதில் அந்த ஒரே மாணவன் தான், இந்த முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்ததாக நம்பப்படுகிறது.

​வாட்சப் குழுவில் ஏற்பட்ட தவறான புரிதலே இச்சம்பவத்திற்கு காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவியும் சந்தேக நபர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கடந்த மே 22-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட மாணவி இரண்டு சந்தேக நபர்களால் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் மற்ற 5 மாணவிகளால் சூழப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

​தற்போது இச்சம்பவம், கலவரம் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றங்களுக்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!