உல்லாசப் பயணம் சோகத்தில் முடிந்தது: திரங்கானு நீர்வீழ்ச்சியில் குளித்த பழ வியாபாரி நீரில் மூழ்கி மரணம்

உலு திரங்கானு, மே-29 – திரங்கானு, குவாலா பெராங் அருகேயுள்ள பெலுக்கார் புக்கிட் (Belukar Bukit) நீர்வீழ்ச்சிக்குக் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்ற பழ வியாபாரி ஒருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மரணமடைந்தவர் மாராங், Kampung Kelulut-ட்டைச் சேர்ந்த 26 வயது Muhammad Zahari Mohd Zain, என உலு திரெங்கானு மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.
மாலை 4 மணிக்கு மேல் தகவல் கிடைத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடம் விரைந்தனர்.
உயிரிழந்த இளைஞர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 19 பேருடன் அங்குச் சென்றது,
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களில் 5 பேர் மட்டுமே நீரில் இறங்கிக் குளித்த நிலையில், மாலை 5 மணியளவில் அந்த இளைஞர் மயங்கிய நிலையில் பொது மக்களால் மீட்கப்பட்டு, பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதிச் செய்தனர்.
அவரின் சடலம் சவப்பரிசோதனைக்காக உலு திரங்கானு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பொது மக்கள் நீர்நிலைகளில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.



