சென்னை, நவம்பர்-20, கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கான IndiGo விமானத்தில், நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் பயணி உயிரிழந்தார்.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது சுயநினைவற்ற நிலையிலிருந்தவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை, மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்தவர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது ராசாத்தி என அடையாளம் கூறப்பட்டது.
ஈராண்டுகளாக அவர் மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் தாயகம் திரும்பும் வழியில் அவர் மரணமடைந்தார்.