
மலாக்கா, டிசம்பர் 9 – ஜாசின் மாவட்ட காவல் நிலையத்தில் (IPD) பெண் ஒருவர் அவரது மகளுடன் சாலை விபத்து குறித்து புகார் அளிக்க வந்த போது, அவர்களின் “pant-skirt” ஆடை, SOP-ஐ மீறியதாகக் கூறி நுழைவு மறுக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காவல் நிலையம், அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய ஆடை நெறிமுறைகளை மீறியதால் அவர்கள் உள்ளே நுழைய மறுக்கப்பட்டார்கள் எனவும், மீண்டும் உரிய ஆடையில் வந்த போது புகார் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் துறை அமைச்சரும் DAP தேசிய தலைவருமான YB கோபிந்த் சிங் டியோ, ஒருவரின் ஆடை காரணமாக போலீசில் புகார் செய்ய மறுக்கப்படுவது நீதிக்கு புறம்பான ஒன்று என்று கூறி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
போலீஸ் நிலையம் என்பது, மக்களுக்கு உதவி செய்யும்
உடனே தவிர அவசர காலத்தில் மக்களை இப்படி அலைக்கலைக்ககூடிய இடமல்ல.
அதிலும், உடைகளைப் பார்த்தா குற்றம் நடக்கிறது? ஆபத்து அவசரம் என வரும்போது, மக்கள் எப்படி சரியான உடை அணிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே உள்நாட்டு அமைச்சருடன் SOP-களை மீளாய்வு செய்து, பொதுமக்களுக்கு புகார் செய்ய தடையாக இருக்கும் விதிகளை நீக்க அமைச்சர் கோபிந்த் சிங் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.



