
கோலாலம்பூர், மார்ச் 4 – தனது மூத்த சகோதரியை பராங் கத்தியைக் காட்டி மிரட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு , பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
32 வயதுடைய ஜைனுல் அரிபின் ஜெய்த் ( Zainul Ariffin Jaid ) என்பவரின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் அரசு தரப்பின் முறையீட்டை கருத்திற்கொண்டு அவருக்கு மாஜிஸ்திரேட் நோவல் தாஸ் அபராதம் விதித்தார்.
மார்ச் 1 ஆம் தேதி மதியம் 1.40 மணியளவில் ரெங்கிட்டில் , ஸ்ரீ மெர்லாங்கில் உள்ள ஒரு வீட்டில் தனது 44 வயது சகோதரியை வேண்டுமென்றே பயமுறுத்தியதாக ஜைனுல் மீது குற்றவியல் சட்டத்தின் 506ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீரிழிவு சிகிச்சைக்காக தங்கள் தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சகோதரி எழுப்பத் தவறிதாயல் அந்த ஆடவர் கோபமடைந்து அவரை மிரட்டியதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.



