Latestமலேசியா

சக மாணவரை இஸ்திரிப் பெட்டியால் தாக்கியதாக சமயப் பள்ளி மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

பாரிட், செப்-25- பேராக்கில் கடந்த வாரம் சமயல் பள்ளியொன்றில் கேலி வதை செய்யும் நோக்கில் சக மாணவரை இஸ்திரிப் பெட்டியால் தாக்கியதாக 13 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்கள் மீது இன்று பாரிட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அவ்விருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.

அச்சம்பவம் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் நிகழ்ந்தது. 13 வயதுடைய மாணவருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இஸ்திரிப் பெட்டியைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 மற்றும் பிரிவு 34-ன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதேனும் தண்டனை விதிக்கப்படலாம்.

அவ்வழக்கை துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜெயஸ்ரீ நடத்தினார். அதேவேளையில், அந்த இரு மாணவர்கள் சார்பில் தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் வழக்கறிஞர் Nur Nadzrah Badarudin வாதாடினார்.

அவ்விரு மாணவர்களும் தலா 5,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவ்வழக்கு விசாரணை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!