Latestமலேசியா

சமூக ஊடகங்களில் வெறுப்பைத் தூண்டுவோரைப் புறக்கணிக்க வேண்டும்; ரமணன் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச்-15-சமூக ஊடகங்களில் வெறுப்பு மற்றும் இன உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்களை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சிலர், சமூக ஊடகங்களை பயன்படுத்தி இன மற்றும் மத பாகுபாட்டை தூண்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மலேசியாவில் பல்லின மக்கள் நீண்ட காலமாக அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நல்லிணக்கம் அவர்களின் கண்களுக்குப் பொறுக்கவில்லை.

எனவே தான் அதனைக் கெடுக்க முயலுகின்றனர்.

இப்படிப்பட்ட வெறுப்புப் பதிவுகளைப் பகிராமல், அதற்கு பதிலளிக்காமல் இருப்பது முக்கியம் என, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

மக்கள் ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!