சுங்கை பூலோ, டிசம்பர்-30, சுங்கை பூலோ, சவ்ஜானா உத்தாமா, தாமான் ஸ்ரீ ஆலாம் அருகேயுள்ள நீர் தேக்க அணை நேற்று மாலை உடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் நீர் புகுந்ததில் சுமார் 200 வீடுகள் பாதிக்கப்பட்டன.
நீர் மட்டம் ஒரு அடி உயரத்திற்கு இருந்ததாக தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
நீர் தற்போது வற்றி விட்டாலும், பாதுகாப்புக் கருதி குடியிருப்பாளர்களை அங்கிருந்து மாற்றுவதற்கான தேவை குறித்து ஆராயப்படுவதாக, பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு-மீட்புத் துறை தலைவர் அஸ்ரெல் இசைய்டி அஹமாட் (Azrel Izaidi Ahamad) கூறினார்.
சேதங்களை மதிப்பிட கால அவகாசம் பிடிக்கும் என்பதால், நிலவரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றார் அவர்.
வைரலான நேற்றைய அச்சம்பவம் யாரும் காயமடையவில்லை; உயிர் பலியும் ஏற்படவில்லை என முன்னதாக உறுதிப்படுத்தப்பட்டது.