மொரோக்கோ, அக்டோபர் 10 – சஹாரா பலைவனம் என்றாலே எங்கும் மணல் பரப்பும், சுட்டெரிக்கும் வெப்பமும்தான் நினைவுக்கு வரும்.
ஆனால், கடந்த மாதம், இரு நாட்களுக்குப் பெய்த கனமழையை அடுத்து, பூமியின் வறண்ட இடமான சஹாரா பாலைவனத்தின் ஒரு சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கனமழைப் பொழிவுக்குப் பிறகு, இதற்குமுன் 50 ஆண்டுகளாக வற்றியிருந்த ‘இரிக்கி’ (Iriqui) ஏரி, தற்போது நிரம்பிவிட்டது.
சராசரியாக ஓராண்டில் பொழியும் மழையைக் காட்டிலும் ஒருசில பகுதிகளில் அந்த இரண்டு நாட்களில் பெய்த மழை அதிகமாக இருந்ததாக மொரோக்கோ அரசாங்கம் தெரிவித்தது.
பாலைவனத்தில் தேங்கிய வெள்ளநீர், தடாகங்களாகவும் குட்டைகளாகவும் உருவாகி காட்சியளிக்கிறது.
ஆறு ஆண்டுகளாக மொரோக்கோ நாட்டை வாட்டி வதைத்த வறட்சிநிலையை அடுத்து, பெய்த இந்த மழை பலருக்கும் வரமாக அமைந்துள்ளது.