
கோத்தா பாரு, ஜன 19 – ஜனவரி 11 ஆம் தேதி Narathiwat மாநிலத்தில் உள்ள ஐந்து பெட்ரோல் நிலையங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்களை தாய்லாந்து அதிகாரிகள் இன்று வெளியிட்டனர்.
அவர்கள் மலேசிய எல்லையில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது. தாக்குதல்களில் மோசமாக சேதமடைந்த நராதிவத், யாலா மற்றும் பட்டானியில் உள்ள 11 எரிபொருள் நிலையங்களில் அந்த ஐந்து பெட்ரோல் நிலையங்களும் அடங்கும்.
44 வயதுடைய Burhanuddeen Samae , 28 வயதுடைய Hafiz Busa , மற்றும் 44 வயதுடைய Si Masae ஆகியோரே அந்த சந்தேகப் பேர்வழிகள் என தாய்லாந்தின் நான்காவது இராணுவ பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Narathip Phoyanok தெரிவித்தார்.
Pattani மற்றும் Narathiwat ட்டைச் சேர்ந்த அந்த நபர்களுக்கு எதிராக ஜனவரி 11 ஆம் தேதி இரவு Narathiwat நீதிமன்றம்
கைது உத்தரவை பிறப்பித்தது.



