கோலாலம்பூர், டிச 13 – தலைநகரைச் சுற்றியுள்ள பாதைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த 384 மின் ஸ்கூட்டர்களை DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநாகர் மன்றம் நேற்று பறிமுதல் செய்தது. 1974ஆம் ஆண்டின் சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் மேற்கொள்ளப்பட் சிறப்பு நடவடிக்கையில் அந்த மின் ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
“மொத்தம் 384 யூனிட் மின் ஸ்கூட்டர்கள் உடனடியாக பறிமுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதோடு அவை அனைத்தும் செராஸ் தாமான் மிஹர்ஜாவில் ஜாலான் லோம்போங்கிலுள்ள கையிருப்பு கிடங்கிற்கு நகரவாசிகள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நல்வாழ்வுக்காக நாங்கள் அவ்வப்போது நடவடிக்கைகளையும் கண்காணிப்பையும் தொடர்வோம் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. .