
ஷா அலாம், மார்ச் -5 – சிலாங்கூர் போலீஸ் துறை செகிஞ்சான் மற்றும் சபாக் பெர்னாம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் புலம் பெயர்ந்தோர் கடத்தலை முறியடித்தனர்.
மார்ச் 2 ஆம்தேதி மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்கையில் சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் குற்றச் செயல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் பாசீர் பஞ்சாங்கிலுள்ள பெட்ரோன் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய கருப்பு நிற புரோடுவா அல்சா காரை தடுத்து நிறுத்தி பரிசோதித்தபோது அதில் வெளிநாட்டு பிரஜைகளான ஆறு ஆடவர்கள் மற்றும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
34 க்கும் 53 வயதுக்குமிடையிலான அவர்களுடன் அவர்களை நாட்டிற்கு கொண்டுவந்த ஆடவரும் கைது செய்யப்பாட்டார். அந்த நடவடிக்கையின்போது புரோடுவா அல்சா காருடன் , இரண்டு கை தொலைபேசிகள், ஒரு அடையாளக் கார்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
மார்ச் 5ஆம் தேதி சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை , புக்கிட் அமான் டுரோன் பிரிவு , சபாக் பெர்ணம் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் Jalan Semanjong Bernam மிலுள்ள ஒரு செம்பனை தோட்டம் மற்றும் சபா பெர்ணம் கம்போங் செகண்டியல் நடத்திய சோதனையில் அங்குள்ள செம்பனை தோட்டத்தில் மறைந்திருந்த மலேசிய பிரஜைகள் அல்லாத இரண்டு சிறுவர்கள் உட்பட 32 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 15 ஆடவர்களுடன் 14 பெண்கள், ஒரு சிறுமி மற்றும் இரண்டு சிறுவர்களும் அடங்குவர் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ சஷ்லி கஹார் ( Shazeli Kahar ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



