
கோத்தா பாரு, மார்ச் 14 – குவா மூசாங் – கோத்தா பாரு (Gua Musang-Kota Bharu) நெடுஞ்சாலையில் Ladang Rakyatட்டிற்கு அருகே இன்று அதிகாலை மணி 12.50 அளவில் திடீரென மரம் ஒன்று சாலையில் விழுந்ததைத் தொடர்ந்து இரண்டு லோரிகளுடன் மற்றும் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவு பஸ்சும் விபத்தில் சிக்கின.
விரைவு பஸ்ஸை அதன் ஓட்டுனர் திடீரென நிறுத்தியதைத் தொடந்து இந்த விபத்து நிகழ்ந்தது.
சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கோலாக்கிரைய் (Kuala Krai) தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் 8 உறுப்பினர்கள் சென்றடைந்தபோது லோரி ஓட்டுனர் ஒருவர் லோரிக்குள் சிக்கிக் கொண்டதை கண்டனர்.
எனினும் பொதுமக்களின் உதவியோடு அவர் லோரியிலிருந்து மீட்கப்பட்டார் என கோலாக்கிராய் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் முதிர்நிலை அதிகாரி Razani Mamat வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
விரைவு பஸ் திடீரென நின்றதால் அதன் பின்னால் வந்த 10 டன்களைக் கொண்ட இரண்டு லோரிகள் கட்டுப்படுத்த முடியாமல் பஸ் பின்னால் மோதின.
எனினும் இந்த விபத்தில் அந்த விரைவு பஸ் ஓட்டுனரும், அதன் உதவி ஓட்டுநரும் மற்றும் அந்த பஸ்ஸிஸ் இருந்த 40 பயணிகளும் காயம் அடையவில்லை.
மற்றொரு 10 டன் லோரியை ஓட்டிச் சென்ற லோரி ஓட்டுனர் காயம் அடையவில்லை.
லோரியிலிருந்து மீட்கப்பட்ட லோரி ஓட்டுனர் காயம் அடைந்தததால் சிகிச்சைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
சாலையில் விழுந்து கிடந்த மரம் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டது.