சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் சிறார் சித்ரவதை சம்பவங்கள் அதிகரிப்பு

சிங்கப்பூர், நவம்பர்-23 – சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் குழந்தைகள் மீதான சித்ரவதை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
2023-ரில் 169 சம்பவங்கள் பதிவான நிலையில், கடந்தாண்டு 227 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டன.
இவ்வாண்டில் இதுவரை அத்தகைய 195 சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பாலர் பள்ளிகளில் CCTV கேமரா பொருத்தப்படுவது 2024 ஜூலை முதல் கட்டாயமாக்கப்பட்டதும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக விழிப்புணர்வுடன் புகார் அளிப்பதும் அதற்கு உதவியுள்ளன.
முடிந்த வாரத்தில் கூட 2 சம்பவங்கள் நீதிமன்றம் சென்றன.
குழந்தைகளை அடித்ததாக ஒரு மாதுவும், குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவளித்ததாக ஓர் ஆசிரியையும் குற்றம் சாட்டப்பட்டனர்.
சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்ய இதுபோன்ற கடுமையான சட்ட அமுலாக்கம் அவசியம் என்பதை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.



