
கோலாலம்பூர், செப்டம்பர்-26,
சிறார் தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் paracetamol பயன்படுத்துவது, நரம்பியல் வளர்ச்சிக் குறைப்பாடான ஆட்டிசத்திற்கு காரணமென கூறப்படுவதை, சுகாதார அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனமான WHO-வே தடுப்பூசிகள் ஆட்டிசத்துக்கு காரணமல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ Dr. Mahathar Abd Wahab தெரிவித்தார்.
கடந்த 50 ஆண்டுகளில் தடுப்பூசிகள் உலகளவில் 15 கோடியே 40 லட்சம் உயிர்களை காப்பாற்றியுள்ளன; அதோடு, 30-க்கும் மேற்பட்ட தொற்றுநோய்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின் கீழ் paracetamol எடுத்துக்கொள்ளலாம்; இதனால் ஆட்டிசம் ஏற்படுவதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், folinic acid மருந்து ஆட்டிசத்தை குணப்படுத்துமென்ற கூற்றுகளும் அறிவியல் ஆதாரமற்றவை; அதை நிரூபிக்க பெரிய அளவிலான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனவே அறிவியல் ஆதாரற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பாதுகாப்பான மருந்துகள் மற்றும் தடுப்பூசி கண்காணிப்பில் அமைச்சு தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் Mahathar அறிக்கையில் வலியுறுத்தினார்.