Latestமலேசியா

சிவப்பு எச்சரிக்கை விளக்கை தனது ஓட்டுநர் மீறியதற்காக நெகிரி செம்பிலான் மந்திரிபெசார் மன்னிப்பு கோரினார்

சிரம்பான், மார்ச் 4 – தனது அதிகாரப்பூர்வ வாகன ஓட்டுநர் சாலையில் சிவப்பு எச்சரிக்கை விளக்கை மீறிச் சென்றதற்காக நெகிரி செம்பிலான் மந்திரிபெசார் அமினுடின் ஹருன் ( Aminuddin Harun ) மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தனது ஓட்டுநர் அவ்வப்போது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்வதற்காக சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாக அவர் கூறினார்.

பல நிகழ்ச்சிகளால் தனது பரபரப்பான தினசரி அட்டவணையை ஈடுசெய்வதற்காக , தனது ஓட்டுநர் இழந்த நேரத்தை ஈடுசெய்ய வேண்டியிருந்ததால் சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாக Aminuddin விளக்கினார்.

நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இல்லையெனில், நானே அதைச் செய்யத் துணிய மாட்டேன்.

வழக்கமாக, இதுபோன்ற விவகாரங்களில் மாநிலத் தலைவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுவதாக இன்று விஸ்மா நெகிரியில் நடந்த மாநில ஆட்சிக் குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார்.

வைரலான ஒரு வீடியோவில், மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ வாகனம் சிவப்பு எச்சரிகை மீறி செல்லும் காணொளி சினார் ஹரியான் வெளியிட்டதைத் தொடர்ந்து அமினுடின் இந்த விளக்கத்தை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!