
கோலாலம்பூர், அக்டோபர்-14 – சீனக் கடற்படையின் 2 கப்பல்கள் பினாங்கு வந்ததில் நாட்டின் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை.
‘Qi Jiguang’ மற்றும் ‘Jinggangshan’ இரு போர் பயிற்சிக் கப்பல்களும் மலேசியா வருவதற்கு தற்காப்பு அமைச்சு ஒப்புதல் அளித்திருந்ததாக, இன்று மீண்டும் தொடங்கிய மக்களவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வெளியுறவு அமைச்சோ, அவ்விருக் கப்பல்களும் மலேசியக் கடல் பகுதிக்குள் நுழைவதற்கும், நிறுத்துவதற்கும் மட்டுமே அனுமதி வழங்கியதாக, அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் (Datuk Seri Mohamad Hasan) தெரிவித்தார்.
கன்ஃபூசியன் அடிப்படையிலான போதனைகள் மற்றும் மற்ற இடங்களைப் பார்வையிட சீன தூதரகத்திடமிருந்து வந்த கோரிக்கையை அதிகாரிகளே கையாண்டனர்.
ஒருவேளை அதில் விதிமீறல்கள் இருந்திருந்தால் அதை நிச்சயம் விசாரித்திருப்போம்; ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை என, அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது அவர் சொன்னார்.
பினாங்கிற்கான சீனக் கடற்படை கப்பல்களின் வருகை குறித்த மலேசியாவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு மொஹமட் ஹசான் அவ்வாறு பதிலளித்தார்.