சீனா, செப்டம்பர் 3 – கிழக்கு சீனாவில் உள்ள பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த பெற்றோர் மற்றும் குழந்தைகள் மீது பேருந்து மோதிய விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், 5 மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
CCTV-யின் காட்சிகளின் வழி, அந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த பெற்றோர் மற்றும் குழந்தைகள் மீது மோதுவதைப் பாரக்க முடிகிறது.
இதனை தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனாவில் பல அரசாங்கப் பள்ளிகள், இந்த வாரம் புதிய கல்வியாண்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மிகக் குறைவான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் பரவலான ஒழுங்கற்ற வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் போக்குவரத்து விபத்துக்கள் அடிக்கடி, அந்நாட்டில் நிகழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.