
கோலாலம்பூர், ஜன 16 – Waktu Bekerja Berlainan அல்லது வெவ்வேறு வேலை நேர முறையை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவு பொது சேவைத் துறையின் ஒப்புதலுக்கு அளிக்கப்படவில்லை அல்லது சமர்ப்பிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெப்லி அகமட் ( Dzulkefly Ahmad ) தெளிவுபடுத்தினார்.
இந்த திட்டம் இன்னும் தொடக்க கட்டத்தில் இருப்பதாகவும், சுகாதாரப் பணியாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
முதல் விஷயம் இந்த முன்மொழிவுக்கு நான் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, மேலும் இதனை பொதுச் சேவைத் துறையிடம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று அவர் கூறினார்.
அதற்குள் வெவ்வேறு வேலை நேர முறை ஏற்கனவே ‘கசிந்துவிட்டது.
எப்படி கசிந்தது என்று தனக்கு தெரியாது என்பதோடு யார் அதனை கசிய விட்டது என்றும் தனக்கு தெரிவிலையென சுல்கெப்லி தெரிவித்தார்.
தாம் இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில் அந்த விவரங்கள் கசிந்தது துரதிஸ்டவசாமானது என அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற கண்கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
மருத்துவமனை நிபுணர்கள் மற்றும் துறைத் தலைவர்களை உள்ளடக்கிய கடுமையான ஈடுபாடு மற்றும் மதிப்பீட்டு செயல்முறையை சுகாதார அமைச்சு ம் பின்பற்றும் என Dzulkefly கூறினார்.