சுங்கை பூலோ, டிசம்பர்-2 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள குவாங் மலிவு விலை வீடமைப்புப் பகுதியில் நேற்று முன்தினம் வீடுகளுத் தீ வைத்த ஆடவர் கைதாகியுள்ளார்.
அதில் அவரது வீடுமே தீக்கிரையானதாக சுங்கை பூலோ போலீஸ் தலைவர் ஹாஃபிஸ் நோர் (Hafiz Nor) கூறினார்.
அவரது வீட்டிலிருந்துதான் தீ பரவியுள்ளது; ஆனால் அவர் தீ வைத்தற்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.
அச்சம்பவத்தில் 3 வீடுகள் தீயில் அழிந்த வேளை மேலுமிரு வீடுகளுக்கு சிறிய அளவிலான சேதமே ஏற்பட்டதாக ஹாஃபிஸ் சொன்னார்.
தீயை அணைக்கும் போது பத்து ஆராங் தீயணைப்பு-மீட்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
34 வயது சந்தேக நபர் விசாரணைக்காக டிசம்பர் 4 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.