
சுபாங் ஜெயா, ஜூலை-21- சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் ஒரு பங்களா வீட்டில் தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற ஆட்டம் பாட்டத்தில், போலீஸார் நுழைந்து சோதனை நடத்தியதில் 12 பேர் கைதாகினர்.
பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு அச்சோதனை நடத்தப்பட்டது.
13 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட 38 பேரை சோதனை செய்ததில், 12 பேர் போதைப்பொருள் உட்கொண்டது சிறுநீர் பரிசோதனையில் உறுதியானது.
அவர்களில், 21 முதல் 25 வயதிலான 4 மலேசிய இளைஞர்கள் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
அனைவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
6.5 கிராம், marijuana , 1.7 கிராம் ketamine வகைப் போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.