
சுபாங் ஜெயா – ஜூலை-26 – 2 வாரங்களுக்கு முன் சுபாங் ஜெயாவில் தனது முன்னால் காதலன் நடத்தியக் கத்துக் குத்துத் தாக்குதில் கழுத்தில் படுகாயமடைந்த சீன நாட்டு மாணவி, நிரந்தர உடல் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.
அத்தாக்குதல், 20 வயது அம்மாணவியின் இடதுக் கை நரம்புகளை மோசமாகப் பாதித்துள்ளதாக, அவரின் வழக்கறிஞர் கூறினார்.
எனவே முழுமையாக குணமடையும் வாய்ப்புக் குறைவே என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கழுத்தில் கத்திப் பாய்ந்ததில் 10 சென்டி மீட்டர் ஆழத்திற்குக் காயமேற்பட்டு, 40-கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன.
தவிர, நெஞ்சிலும் நுரையீரலிலும் அதிக இரத்த இழப்பு ஏற்பட்டதால், அதனை வெளியேற்ற நெஞ்சுக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான வலியால் அம்மாணவியால் தூங்கக் கூட முடியவில்லை என வழக்கறிஞர் சொன்னார்.
இந்நிலையில், அவர் சிகிக்சைப் பெற்று வரும் மருத்துவமனையில் போலீஸார் அம்மாணவியிடம் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளனர்.
ஜூலை 14-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் மாணவியின் முன்னாள் காதலன் கொலை முயற்சி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
அவ்வழக்கு செப்டம்பர் 17-ல் மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.