ஜோகூர், டிசம்பர் 19 – கனவுகள் நிறைந்த திருமணத்தை இலவசமாக கொண்டாட ஒரு அரிய வாய்ப்பை வழங்க வருகிறது கெட்டி மேளம் 3.0.
ஜனவரி 9 முதல் 12 வரை, ஜோகூரில் நடைபெறவிருக்கின்ற கெட்டி மேளம் 3.0 திருமண எக்ஸ்போவில், B40 பிரிவைச் சேர்ந்த சுவாரஸ்யமான காதல் கதை கொண்டுள்ள, தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஜோடிக்கு முழுக்க முழுக்க இலவசமாக ஸ்பான்சர் (sponsor) முறையில் பிரமாண்டமாக திருமணம் செய்து வைக்கப்படும்.
இப்பிரமாண்டமான வாய்ப்பை ஏற்பாடு செய்துள்ள Ketti Mellam Exhibition & Services குழு, 14 முன்னணி விற்பனையாளர்களின் ஒத்துழைப்புடன், மண்டப அலங்காரம், புதுமண தம்பதிகளுக்கான ஆடைகள், உணவு, வீடியோ பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கவுள்ளது.
இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என யோசனையா?
– உங்கள் காதல் கதையைக் கெட்டி மேளம் இணையதளத்தில் பதிவிடுங்கள்;
– அல்லது திரையில் காணும் QR code-யை ஸ்கேன் செய்து பதிவு செய்யுங்கள்;
– அல்லது, கெட்டி மேளம் 3.0 எக்ஸ்போ நடைபெறும் நாள்களில், walk-in-booth மூலமாகவும் உங்கள் கதையை நேரடியாகவே சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்
உங்கள் கதைகளைக் கேட்டறிய கெட்டி மேளம் 3.0 குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்ட ஜோடி யாரென்ற விவரம் பின்னர் கெட்டி மேளம் சமூக ஊடகப் பக்கத்தில் அறிவிக்கப்படுவர்.
உங்கள் காதல் திருமணத்திற்கான அழகான தொடக்கம் கெட்டி மேளம் 3.0.