Latestமலேசியா

செகு சந்திராவை மிரட்டியவர்கள் பயணித்த மோட்டார் அப்பெண்ணுடையதால்தான் அவரை கைது செய்தோம் – போலிஸ் விளக்கம்

ஷா அலாம் ,மார்ச் 16-பூச்சோங், தாமான் கின்ராராவிலுள்ள ஒரு வீட்டில் செகு சந்திராவை மிரட்டியது மற்றும் அவரை தாக்கியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக உள்நாட்டு பெண் ஒருவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். இந்த பெண் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவியாகும்.

பாதிக்கப்பட்டவரின் வீட்டில் பெட்ரோல் ஊற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒரு பெண்ணின் பெயரில் இருந்ததால் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

எனினும் அப்பெண் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் சஷெலி கஹார்(Shazeli Kahar ) தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை தொடங்கி நேற்று வரை பந்திங், சுபாங் மற்றும் செர்டாங் உள்ளிட்ட பல இடங்களில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை , சிலாங்கூர் போலீஸ் தலைமையகம் குற்றவியல் விசாரணைத்துறை மற்றும் செர்டாங் போலீஸ் தலைமையகம் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பான நேரடி விசாரணைக்காக எழுவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் இதர ஐவர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக இன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்( Shazeli Kahar ) விவரித்தார்.

சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சாம்பல் நிற டொயோட்டா வியோஸ், ஹோண்டா சிட்டி மற்றும் நிசான் அல்மேரா ஆகிய மூன்று வாகனங்களும், ஹோண்டா வேவ் மற்றும் யமஹா Y16 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேக நபர்களில் ஐவர் கடந்த கால குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்கள் இன்னும் கண்காணிக்கப்பட்டு வந்தபோதிலும் அந்த தனிநபர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குற்றவியல் சட்டத்தின் 427 , 506 மற்றும் 435ஆவது பிரிவுகளின் கீழ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக Shazeli Kahar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!