Latestமலேசியா

ஜாலான் செராஸில் பெற்றோருடன் பயணித்த 8 வயது சிறுமி விபத்தில் பலி

கோலாலம்பூர், ஜூன் 3 – பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 8 வயது சிறுமி, ஜாலான் செராஸ் நோக்கிச் செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காலை 8.18 மணியளவில் நடந்த இந்த விபத்தில், நெரிசலான போக்குவரத்தில் வாகனங்களுக்கு இடையே சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து Honda கார் மீது மோதியது. பின்னர் பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதியதால் விபத்து ஏற்பட்டது.

சிறுமி தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!