
கோலாலம்பூர், பிப்ரவரி-28-கோலாலம்பூரில் நேற்று நிகழ்ந்த ஒரு கோர சாலை விபத்தில் 34 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.
அவர் ஜாலான் செராஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது, முன்னே சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவர் கீழே விழுந்து, இடப் பக்க பாதையில் சென்ற லாரியின் கீழ் இழுத்துச் செல்லப்பட்டார்.
தலையில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து 45 வயது லாரி ஓட்டுநர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அபாயகரமாக வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக விசாரணை நடைபெறுகிறது.
சம்பவத்தை கண்டவர்கள் துன் ஹெச்.எஸ். லீ போக்குவரத்து போலீஸ் நிலையம் அல்லது அருகிலுள்ள எந்த போலீஸ் நிலையத்தையும் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



